சுகாதாரத்துறையினருடன், பிற துறைகளை சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, காவல்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் ஊடகத்துறையினருக்கு விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளும் கூடுதல் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். இதனிடையே, 13 நாட்களில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதன் மூலம், உலகிலேயே மிகவேகமாக கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments