உருமாறிய கொரோனா தொற்று பரவலின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டித்து விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா - பிரிட்டனுக்கு இடையே விமான சேவை தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. பிரிட்டனிலிருந்து வந்த பயணிக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதியானதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments