Ticker

6/recent/ticker-posts

Ad Code

Doctor Vikatan: உடலில் சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குப் போவார்களா?

Doctor Vikatan: உணவில் உப்பை முற்றிலும் தவிர்த்தால் உடலில் சோடியம் குறைந்து கோமாவுக்குச் செல்ல வாய்ப்பு உண்டா... சோடியம் குறைந்தால் அதை எப்படிச் சமாளிப்பது... சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆன்டன் உரேஷ்குமார்

சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆன்டன் உரேஷ்குமார்

சோடியம் நமது உடலின் ஆற்றலுக்கும், உடலின் இயக்கத்திற்கும் மற்றும் ஒவ்வொரு செல்லின் செயல்பாட்டிற்கும் மிகமிக முக்கியமானது. உடலில் ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதற்கு சோடியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களை உப்பைக் குறைத்துச் சாப்பிடச் சொல்வோம். ஆனால், சோடியத்தை முற்றிலும் தவிர்த்தால் பாதிப்புகள் ஏற்படும்.

சோடியத்தின் அளவிற்கு என்று ஓர் அளவுகோல் உள்ளது. சோடியத்தின் அளவு 135 முதல் 125 வரை குறையும்போது உடலில் சோர்வு (Weakness), களைப்பு (Tiredness) மற்றும் லேசான குழப்பம் (Mild confusion) போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

சோடியத்தின் அளவு 125-க்கும் கீழே குறைந்தால் அது மிகவும் ஆபத்தானது. பொதுவாக சோடியம் அளவை இந்த அளவிற்கு குறைய விடமாட்டார்கள். ஒருவேளை இவ்வளவு குறைந்தால் நோயாளிக்கு வலிப்பு, கடுமையான குழப்பம் (Severe confusion) அல்லது டெலிரியம் (Delirium) போன்ற நிலைகள் ஏற்படலாம். சில நேரங்களில் நோயாளி கோமா நிலைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.

நோயாளிக்கு வலிப்பு, கடுமையான குழப்பம் (Severe confusion) அல்லது டெலிரியம் (Delirium) போன்ற நிலைகள் ஏற்படலாம். சில நேரங்களில் நோயாளி கோமா (Comma) நிலைக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது.

வயது முதிர்ந்தவர்களுக்கு சோடியம் அளவை ரொம்பவும் அதிகமாகக் கட்டுப்படுத்துவது முற்றிலும் நல்லதல்ல. ஏனெனில், முதியவர்களுக்குப் பல காரணங்களால் சோடியம் அளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே, சோடியம் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். இது போன்ற பிரச்னைகள் இருந்தால், உடலில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் (Electrolytes) அளவைப் பரிசோதித்து,  பொது மருத்துவர் (General Physician) அல்லது சிறுநீரகவியல் மருத்துவரை (Nephrologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

முதியவர்களுக்கு புராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யும்போது சோடியம் அளவைக் கண்காணிப்பது சிறுநீரக மருத்துவர்களுக்கு மிக முக்கியமானது. அறுவை சிகிச்சையின் தூண்டுதலால்கூட (Surgery induced) சோடியம் அளவு குறையலாம். அறுவை சிகிச்சையின் போது சோடியம் அளவு 125-க்குக் கீழ் குறைந்தால், அந்த நோயாளிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. இது ஆண், பெண் இருபாலருக்குமே வயது முதிர்ந்த காலத்தில் பல காரணங்களால் ஏற்படலாம்.

 சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உள்ள நோயாளிகளை 5 கிராமுக்குள் உப்பு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம். அதேபோல், ரத்த அழுத்த நோயாளிகளையும் உப்பைக் கட்டுப்படுத்தச் சொல்வோம். 

சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உள்ள நோயாளிகளை 5 கிராமுக்குள் உப்பு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.

உப்புச்சத்தை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்தும்போது குழப்பம் போன்ற பிரச்னைகள் வரும். குறிப்பாக, அதிகப்படியான வியர்வை வெளியேறும் போதும் அல்லது பேதி (Loose motion) ஆகும் போதும் உடலில் இருந்து எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் சோடியம் இழப்பு (Sodium loss) அதிகமாக ஏற்படும். அந்த நேரத்தில் உப்பை முற்றிலும் தவிர்த்தால் அது பெரிய பொதுநல பாதிப்புகளை உண்டாக்கும்.

எதையும் மருத்துவரின் கண்காணிப்பிலோ அல்லது ஆலோசனைப்படியோ மட்டுமே செய்ய வேண்டும். எனவே, உங்கள் வாழ்க்கை, உணவுமுறை, ஆரோக்கியம், நேரம், தொழில் மற்றும் குடும்பம் என அனைத்தையும் சமநிலையில் வைத்திருங்கள். சமநிலையான வாழ்க்கைதான் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் மகிழ்ச்சியைத் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news

Post a Comment

0 Comments