Ticker

6/recent/ticker-posts

Ad Code

Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது எந்த மாத்திரையை எவ்வளவு எடுக்க வேண்டும்?

Doctor Vikatan:  மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது  குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.   

சில விதமான மாரடைப்புக்கு நைட்ரேட் மாத்திரையைக் கொடுக்கக்கூடாது என்கிறார்கள். குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் மாத்திரைகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்...  நைட்ரேட் மாத்திரையை யார், ஏன் தவிர்க்க வேண்டும்... தெளிவாகச் சொல்லவும்.

-Writer, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் 

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்
கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

நமக்கு இடது பக்க இதயம் (Left ventricle), வலது பக்க இதயம் (Right ventricle) என இரு பகுதிகள் உள்ளன. அதில், வலது பக்க இதயத்திற்கு மாரடைப்பு (Heart attack) ஏற்பட்டால், அவர்களுக்குப் பொதுவாகவே ரத்த அழுத்தமானது மிகக் குறைவாக இருக்கும்.

வலது பக்க இதய மாரடைப்பின் போது ரத்த அழுத்தம் 100-க்குக் கீழ் இருந்தால், அவர்கள் கண்டிப்பாக நைட்ரேட் (Nitrate) மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. அது மிக ஆபத்தாக முடியலாம்.

அது மட்டுல்லாமல், பொதுவாக இடது பக்க இதயத்தில் ஏற்படும் மாரடைப்பின் போது, ரத்த அழுத்தம் (Systolic blood pressure) 100-க்கு மேல் இருந்தால், அவர்கள் தாராளமாக அந்த மாத்திரையை உட்கொள்ளலாம், தவறில்லை. 

இந்த நைட்ரேட் மாத்திரையைத் தவிர மற்ற மாத்திரைகளை நாம் உட்கொள்வதில், அது இடது பக்க மாரடைப்பாக இருந்தாலும் சரி, வலது பக்க மாரடைப்பாக இருந்தாலும் சரி, எந்தவிதமான சிக்கலோ அல்லது தடைகளோ இருப்பதில்லை.

ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையைப் பொறுத்தவரை, மாரடைப்பு என்று உறுதியானால் முழு மாத்திரை, அதாவது 300 மில்லிகிராம் அளவுள்ள முழு மாத்திரையை எடுத்துக்கொள்வது நல்லது.

ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையைப் பொறுத்தவரை, மாரடைப்பு என்று உறுதியானால் முழு மாத்திரை, அதாவது 300 மில்லிகிராம் அளவுள்ள  முழு மாத்திரையை எடுத்துக்கொள்வது நல்லது. குளோபிடோக்ரல் (Clopidogrel) மாத்திரை பொதுவாக 75 மில்லிகிராமில் கிடைக்கும். அதில் நான்கு மாத்திரைகளை (மொத்தம் 300 மிகி) எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 

நைட்ரேட் (Nitrate) மாத்திரை என்றால், அதற்கு 'ஐசோசார்பைடு டைநைட்ரேட்' (Isosorbide dinitrate) என்று சொல்லக்கூடிய மருந்தின் 5 மில்லிகிராம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். இது குறித்து உங்கள் மருத்துவரிடமும் முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news

Post a Comment

0 Comments