Ticker

6/recent/ticker-posts

Ad Code

Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன்!' - ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் `டப்பா கார்டெல்' என்ற இந்தி வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தில் ஜோதிகாவுடன், ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Dabba Cartel Series

இந்த சீரிஸின் ரிலீஸ் சமயத்தில் ஜோதிகா நேர்காணல்களில் பேசியிருந்த பல விஷயங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு கிடைக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்பாக இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

'சில மோசமானப் படங்களைவிட...'

அந்த நேர்காணலில் ஜோதிகா, ``எனக்கு மோசமான திரைப்படங்களில்தான் பிரச்னை. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றியைப் பெற்ற பல மோசமான கமர்ஷியல் திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அத்திரைப்படங்களெல்லாம் பெரிய மனதுடன் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், என்னுடைய கணவர் திரைப்படங்களைப் பொறுத்தவரை அது கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக நான் உணர்கிறேன்.

படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்தமாக படத்திற்கு பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். ஆனால், சில மோசமானப் படங்களைவிட கடுமையான விமர்சனங்களை சந்தித்ததை பார்த்தபோது அது என்னை பாதித்தது. ஊடகங்கள் இதை அறிந்துக் கொள்ளாததற்காக நான் மிகவும் வருத்தமடைந்தேன்." எனக் கூறியிருக்கிறார்.

Suriya & Jyothika

இதுமட்டுமல்ல, `கங்குவா' திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தப்போது அது குறித்தும் ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அவர், ``மீடியாக்களிலிருந்தும் சில குழுக்களிலிருந்தும் நெகடிவ் விமர்சனங்கள் வருவது அதிர்ச்சியாக இருந்தது. பெரிய பட்ஜெட்டில் உருவான, அறிவுசாராத, நான் பார்த்த பழைய கதைகளுடன், ஹீரோயினியை துரத்தும் காட்சிகளுடன், இரட்டை அர்த்த வசனங்களுடன், டாப் 10 சண்டை காட்சிகளுடன் வந்த படங்களுக்கு கூட இப்படிப்பட்ட விமர்சனங்கள் வரவில்லை. கங்குவாவின் பாசிடிவ் பக்கங்கள் குறித்து என்ன நிலைப்பாடு? இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்‌ஷன் காட்சியும், கங்குவாவுக்கும் சிறுவனுக்குமான அன்பும் துரோகமும்... ரிவியூ செய்யும்போது நல்லவற்றை மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்." என அப்போது கூறியிருந்தார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from Vikatan Latest news

Post a Comment

0 Comments