Ticker

6/recent/ticker-posts

Ad Code

``ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது''-சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவை வந்துள்ளார். அப்போது, காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சீதாராம் யெச்சூரி

Also Read: ஆப்கன்: `மூடப்பட்ட காபூல் விமான நிலையம்... திடீர் துப்பாக்கிச்சூடு’ -இந்தியர்களை மீட்பதில் சிக்கல்

“இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஆபத்து உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

பெட்ரோலிய பொருள்களுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பெட்ரோலிய பொருள்களின்மீது விதிக்கப்பட்ட வரியைக் குறைத்தால் மட்டுமே, அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க முடியும். இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் நீதித்துறையை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பலரும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.

பெகாசஸ் ஸ்பைவேர்

இதனைக் கண்டித்துப் போராட்டம் நடத்த உள்ளோம். ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள இந்தியர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து எத்தனை இந்தியர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர்? என்ற தகவல் அரசிடம் இல்லை. ஆகஸ்ட் 14-ம் தேதி பிரிவினை பயங்கரவாத நாள் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது. 1938-ம் ஆண்டிலேயே சவார்க்கர் இரண்டு தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான்

அதன்பிறகு 1940-ம் ஆண்டு ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன் வைத்தார். தற்போது இந்தியாவில் 126 இடங்களில் பா.ஜ.க யாத்திரை நடத்தி வருகிறது. இது கொரோனா மூன்றாம் அலை பரவுவதற்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.



from Latest News

Post a Comment

0 Comments