Ticker

6/recent/ticker-posts

Ad Code

தை மாதப் பலன்கள்: `விருச்சிகம் முதல் மீனம் வரை'- யாருக்கு என்ன யோகம்?

தை மாத ராசிபலன்: ஜனவரி 14 முதல் பிப்ரவரி 12 வரை விருச்சிகம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்..

விருச்சிக ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். தந்தையுடன் இருந்து வரும் மோதல் போக்கு நீங்கி, சுமுகமான நிலை ஏற்படும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். இரவு நேரங்களில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

சாதகமான நாள்கள்: ஜன: 16,19,22,25,28 பிப்: 3,6,12

சந்திராஷ்டம நாள்கள்: ஜன 14 இரவு வரை;பிப் 8 இரவு முதல் 9,10 இரவு வரை

அதிர்ஷ்ட எண்கள்: 1,9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடப்பார்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் பொருள் வரவுக்கும் வாய்ப்பு உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

தனுசு ராசி
தனுசு ராசி

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் உதவியும் இருப்பதால், மிகவும் எளிதாகச் செய்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களால் வியாபாரத்துக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

சாதகமான நாள்கள்: ஜன: 20,24,26,29 பிப்: 2,4,7

சந்திராஷ்டமம்: ஜன 14 இரவு முதல் 15,16,17 அதிகாலை வரை; பிப் 10 இரவு முதல் 11,12 வரை

அதிர்ஷ்ட எண்கள்: 2,4,7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்

பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.

மகர ராசி அன்பர்களே!

அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். பெண்கள் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர் களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கண வன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும் என்றாலும் பாதிப்பு இருக்காது. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக் கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்..

மகர ராசி
மகர ராசி

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படி யாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டாம். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

சாதகமான நாள்கள்: ஜன: 14,16,21,25,30 பிப்: 1,4,7,10

சந்திராஷ்டமம்: ஜன 17 அதிகாலை முதல் 18,19 மதியம் வரை

அதிர்ஷ்ட எண்கள்: 3,7

வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.

கும்ப ராசி அன்பர்களே!

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்கு பிள்ளைகள் மூலம் புதிய ஆடை, ஆபரண சேர்க் கைக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின் சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத் தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர் களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

கும்ப ராசி
கும்ப ராசி

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும்.உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சாதகமான நாள்கள்: ஜன: 14,17,22,25,28,31 பிப்: 2,4,8,11

சந்திராஷ்டமம்: ஜன 19 மதியம் முதல் 20,21 இரவு வரை

அதிர்ஷ்ட எண்கள்: 2,3,7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்

பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.

மீன ராசி அன்பர்களே!

மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற வினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். உங்கள் முயற்சி களுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீன ராசி
மீன ராசி

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 14,18,20,26,29 பிப்: 2,5,8,12

சந்திராஷ்டமம்: ஜன 21 இரவு முதல் 22,23,24 விடியற்காலை வரை

அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்

பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments