மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மகாகாவ் என்ற கிராமத்தில் செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து அக்டோபர் 15-ம் தேதிக்குள் சங்கர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள் உடல் ஊதா கலருக்கு மாறி நாக்கு வெளியில் தள்ளிய நிலையில் கொடூரமான முறையில் உயிரிழந்தனர். இதனால் அவர்கள் பேய் பிடித்து இறந்ததாக கிராம மக்கள் நம்பினர். ஆனால் அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களது ரத்தத்தில் கொடிய விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரின் மருமகளிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
சங்கர் மருமகள் சங்கமித்ரா(22) வேளாண்மை விஞ்ஞானியாவார். அவரிடம் விசாரித்த போது அவரும், அவரது உறவுக்கார பெண் ஒருவரும் சேர்ந்து உலகின் மிகவும் கொடிய விஷமாக கருதப்படும் ஒரு வித விஷத்தை ஐந்து பேருக்கும் சாப்பாட்டில் கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. சங்கரும் அவரது குடும்பத்தினரும் சங்கமித்ராவை சித்ரவதை செய்து வந்தனர். இதனை பொறுக்க முடியாமல் சங்கமித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் சங்கமித்ரா இப்படுகொலையை செய்துள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட அந்த விஷத்தை அவர் மும்பையில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் இருந்து வாங்கி இருந்தது தெரியவந்தது.
சங்கமித்ரா வேளாண்மை விஞ்ஞானி என்பதால் ஆராய்ச்சிக்காக அந்த மருந்து தேவைப்படுகிறது என்று கூறி ஆன்லைனில் தேடி வாங்கி இருக்கிறார். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''விஷத்தை மும்பை அந்தேரியில் இருந்து சங்கமித்ரா ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தை சங்கமித்ராவின் முன்னாள் காதலன் அவினாஷ் செலுத்தி டெலிவரி எடுத்துச்சென்று சங்கமித்ராவிடம் கொடுத்துள்ளார். சங்கமித்ராவும், அவினாஷும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். அதோடு அவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
ஆனால் ஒரு ஆண்டுக்கு முன்பு தனது காதலனை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சங்கமித்ராவின் தந்தை இறந்த போது கிராமத்திற்கு சென்ற சங்கமித்ராவுக்கு மீண்டும் அவினாஷ் நட்பு கிடைத்துள்ளது. கணவன் வீட்டார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்த நிலையில் அவருக்கு அவினாஷ் ஆதரவாக இருந்துள்ளார். தந்தை மரணத்திற்கு பிறகு தனது கணவனை விட்டுவிட்டு மீண்டும் காதலனுடன் சேர சங்கமித்ரா முடிவு செய்தார். எனவேதான் ஐதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்த காதலன் உதவியோடு கணவன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்'' என்றனர்.
சங்கமித்ரா, அவரது உறவுக்கார பெண் ஆகியோர் கடந்த 18ம் தேதி கைதி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவினாஷும் கைது செய்யப்பட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news
0 Comments