ரிஷபத்தில் பிறந்த நீங்கள் மற்றவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படுபவர். பொதுநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!
1. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. புது வீடு-மனை வாங்குவது விற்பது தொடர்பான உங்களின் முயற்சிகள் பலிதமாகும்; சொத்து விற்பனை லாபகரமாக அமையும். சிலர், இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்ட வாய்ப்பு உண்டு.
2. ஓரளவு வருமானம் அதிகரிக்கும். ஆக, கைமாற்றாக வாங்கிய கடன்களை இந்த வருடம் தந்து முடிப்பீர்கள்.சிலர், பழைய வாகனத்தை மாற்றிவிட்டுப் புதியரக வாகனத்தை வாங்குவீர்கள்.
3. வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாக வாய்ப்பு உண்டு. மகனின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் உங்களிடம் பாசமாக நடந்துகொள்வார்கள்.
4. வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். உங்களின் கருத்துகளை செயல்பாடுகளை எதிர்த்தவர்களும்கூட, இப்போது வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.
5. உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள். எனினும் உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
6. சிலருக்குத் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக் குறையும் வரும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.
7. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேட முயற்சி செய்ய வேண்டாம். சிறு வாக்குவாதங்களைப் பெரிதாக்கவேண்டாம்.
8. புத்தாண்டில் சனிபகவான் 10-ம் வீட்டில் நீடிக்கும் நிலையில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துசெல்லும். என்றாலும் சமாளித்து மீள்வீர்கள்.
9. நெருக்கமானவர்களிடம்கூட குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வீரியத்தை விட காரியம்தான் பெரிது என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
10. சிலருக்குப் புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது பதவிகளுக்கும், சிறப்புப் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
11. கேதுபகவானின் சஞ்சாரப்படி, பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும். சிற்சில நேரங்களில் உங்கள்மீது கோபப்படுவார்கள். அவர்களிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்கவேண்டாம். ஏப்ரலுக்குப் பிறகு பிள்ளைகளால் ஆறுதலும் ஆதாயமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
12. உறவுகளின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஆயத்தமாவீர்கள். எக்காரணம் கொண்டு எதிர்மறை எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கவேண்டாம்.
13. கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்க வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள்.
14. ஏப்ரல் வரையிலும் ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். அவ்வப்போது, கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு.
15. ஏப்ரலுக்குப் பிறகு ராகு 10-ல் அமர்வதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் பக்குவம் வாய்க்கும். பணியிலும் பொறுப்புகளிலும் அதிகக் கவனம் தேவை. வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
16. ஆண்டு பிறப்பு முதல் 10.5.2025 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும்.
17. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையிலும் சிலருக்கு மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு. தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள்.
18. மே மாதத்துக்குப் பிறகு குருவின் சஞ்சாரப்படி, பணவரவு நிம்மதி தரும். செலவுகள் உண்டு என்றாலும் சுபச்செலவுகளாக அமையும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். கூடா பழக்கங் களிலிருந்து விடுபடுவீர்கள்.
19. சிலருக்குப் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து வரும் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சிலர், புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள்.
20. வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்து அவதிப் படாமல், அளவாக முதலீடு செய்து பயன் பெறுங்கள். சந்தை நிலவரம் அறிந்து புதுக் கொள்முதல் செய்யுங்கள்.
21. புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்தி அழகு படுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கை யாளர்களை அன்பாக நடத்துங்கள்.
22. மருந்து, என்டர்பிரைசஸ், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில், பங்குதாரர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிவார்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள்.
23. செய்யும் வேலைகளில் அங்கிகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் வந்துசேரும்.
24. தனியார் மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் எனில், பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். பணிகளைத் திறம்பட முடித்து, எல்லோரையும் வியக்கவைப்பீர்கள். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
25. கணினித் துறையினரே! அந்நிய நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வாய்ப்பு கிட்டும். சுறுசுறுப்புடன் பணியாற்றி, உரிய பலனை அறுவடை செய்வீர்கள்.
from Vikatan Latest news
0 Comments