Ticker

6/recent/ticker-posts

Ad Code

16 வயது சிறுவனுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் - நடந்தது என்ன?!

அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நோவா நெய். இவர் கடந்த ஆண்டு துப்பாக்கியுடன் திரிந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறார் தடுப்பு மையத்தில் இருந்தார். விசாரணையில், ஓக்லஹோமாவின் துல்சா நகரத்தை அச்சுறுத்தும் ஹூவர் கிரிப்ஸ் குழுவுடன் இணைய விரும்பியதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சிறார் தடுப்பு மையத்திலிருந்து தப்பித்த சிறுவன், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான்.

சிறை

உடனே அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதற்கிடையில், சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கு தொடர்பாக பேசிய வழக்கறிஞர் மோர்கன் மெடர்ஸ், "சிறுவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவனுக்கான சரியான மருத்துவ சிகிச்சையும் மறுக்கப்பட்டிருக்கிறது. அவனின் இந்த நிலைக்கு அவனை முழுவதும் புறக்கணித்து பிரிந்த அவனது பெற்றோர்கள்தான் காரணம் என அவரது அத்தை சாட்சியமளித்திருக்கிறார். அவனுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளை அவன் நிராகரித்து சிறை ஊழியர்களை சிரமப்படுத்தியிருக்கிறான்" எனக் குறிப்பிட்டார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர், "ஏற்கெனவே சிறார் தடுப்பு மையத்தில் இருந்த சிறுவன், மலத்தை ஜெயில் சுவர் முழுவதும் தடவுவது, தப்பிக்க முயற்சிப்பது, காவலர்களுக்கு தொல்லையளிப்பது என அதீதமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறான். அவனை வெளியே விடுவது ஆபத்தை ஏற்படுத்தும்" என வாதிட்டார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றம்,"அக்டோபர் 23 அன்று, துப்பாக்கி வைத்திருந்தது, கொல்லும் நோக்கத்துடன் துப்பாக்கியை பயன்படுத்தியது, போதைப்பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுகளுக்காக 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

Post a Comment

0 Comments