ராமநாத சுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் நேற்று கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அதிகாலை அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். ராமநாத சுவாமி திருக்கோவில் வருகை பதிவேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், "ராமநாத சுவாமியை கும்பிட்டு விட்டு, பர்வத வர்த்தினி அம்மனை தரிசித்தேன். இங்கு கோடிக்கணக்கான மக்கள் மன அமைதிக்காக சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ராமேஸ்வரம் ஒரு புண்ணிய பூமி கடல் எந்த அளவு ஆழமாக உள்ளதோ அந்த அளவு மன அமைதியாக உள்ளது" என உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கருத்தை வருகை பதிவேட்டில் பதிவு செய்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையினால் நீண்ட நேரமாக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
from Latest news
0 Comments