இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் சென்று வருகிறார்கள். அவர்களில் சிலர் குற்றச்செயல்களில் சிக்கி வெளிநாடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வெளிநாடுகளின் சிறைகளில் எத்தனை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றக் கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.
90 நாடுகளில், 8,330 இந்தியர்கள் சிறையில் இருப்பதாக எழுத்துப்பூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்திருக்கிறார்.
சவுதி அரேபியாவில் 1,461 பேரும், கத்தாரில் 696 பேரும் சிறையில் இருக்கிறார்கள்.
நேபாளத்தில் 1,222 பேரும், குவைத்தில் 446 பேரும் சிறையில் இருக்கிறார்கள்.
மலேசியாவில் 341 இந்தியர்களும், பாகிஸ்தானில் 308 இந்தியர்களும் சிறையில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 277 என்ற எண்ணிக்கையிலும், சீனாவில் 178 என்ற எண்ணிக்கையிலும் இந்தியர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
பஹ்ரைனில் 277 பேரும், இங்கிலாந்தில் 249 பேரும் சிறையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இத்தாலியில் இந்தியர்கள் 157 பேரும், ஓமானில் 139 பேரும் சிறைகளில் வாடுகின்றனர்.
பல நாடுகளில் இருக்கும் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர் சம்மதம் தெரிவிக்கும் வரை, உள்ளூர் அதிகாரிகள் கைதிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடதக்கது.
from Latest news
0 Comments