வனத்துறையின் உரிய அனுமதி கிடைக்கும் வரை சென்னை நன்மங்கலம் வனப்பகுதியில் மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையின் போது, வெள்ளக்கல் முதல் மேடவாக்கம் கூட் ரோடு வரையிலான சாலை, ஒருவழிப்பாதை என்பதால் மெட்ரோ ரயில் பணிகளுக்கு அந்த இடம் போதுமான அளவில் இல்லை எனக் கூறப்பட்டது. எனவே நன்மங்கலம் காப்புக்காட்டில் சிறிய பகுதி மட்டுமே மெட்ரோ ரயில் பாதைக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தாக்கல் செய்யும் அறிக்கையை பொறுத்தே முடிவெடுக்க முடியும் என வனத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வனத்துறையின் உரிய அனுமதி கிடைக்கும்வரை மெட்ரோ ரயில் பணிகளை நன்மங்கலம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments