19-வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில், தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் குறிவைத்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அஹமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி, துல்லியமான பந்துவீச்சின் மூலம் குஜராத் அணியை முதல் இன்னிங்ஸிலேயே கட்டுப்படுத்தியது.

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் அணியின் இலக்கை, பெங்களூரு அணி சிரமமின்றி விரட்டியதன் மூலம் தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வென்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய க்ரூணால் பாண்ட்யா, "ஒவ்வொரு ஐ.பி.எல் கோப்பையுமே ஸ்பெசலானதுதான். கடந்த 11 சீசன்களில் 5 கோப்பைகளை வென்றிருக்கிறேன். எந்த கோப்பையை வென்றது ரொம்ப பிடிக்கும் என்ற கேள்வி , உங்களுக்கு எந்த குழந்தையை பிடிக்கும் என்பதை போல இருக்கிறது இந்த கேள்வி.

எல்லாமே எனக்கு ஸ்பெசல்தான். 18 வருட காத்திருப்புக்கு பிறகு 2 கோப்பைகளை வென்றிருப்பது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு சிறப்பான தருணமாக இருக்கும். விராட் கோலிக்கும் இது உச்ச மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நல்ல தருணமாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.
from Vikatan Latest news
0 Comments