Ticker

6/recent/ticker-posts

Ad Code

Gill: 'நாங்க சின்ன பசங்க; இன்னும் கத்துக்கணும்' - கேப்டனாக முதல் தோல்வி குறித்து கில்

'இந்திய அணி தோல்வி!'

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் கில் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

England vs India
England vs India

'கில் சொல்லும் காரணம்!'

கில் பேசியதாவது, 'இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. வெற்றி பெற எங்களுக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால், நாங்கள் கேட்ச்களைத் தவறவிட்டோம். லோயர் ஆர்டர் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை. அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக எங்களின் வீரர்கள் வெளிக்காட்டிய உத்வேகத்தையும் ஆடிய விதத்தையும் கண்டு பெருமைப்படுகிறேன்.

430 ரன்களை எடுத்துவிட்டு டிக்ளேர் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால், நாங்கள் கடைசி 6 விக்கெட்டுகளை 20-25 ரன்களுக்குள் விட்டோம். அது நல்ல அணுகுமுறையே இல்லை. கடைசி நாளான இன்று அவர்களின் ஓப்பனர்கள் சிறப்பாக ஆடிய போதுமே எங்களால் வெல்ல முடியும் என நினைத்தேன். ரிசல்ட் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.

Gill
Gill

வேகமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கிறோம். அதை சரி செய்வதற்கு என்ன வழி என்பதை யோசிக்க வேண்டும். அதேமாதிரி, இந்த பிட்ச்களில் கேட்ச் வாய்ப்பு கிடைப்பதும் ரொம்பவே அரிது. அதையும் நாங்கள் கோட்டைவிட்டோம். நாங்கள் ஓர் இளம் அணி. இன்னுமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்த போட்டியில் இன்னும் மேம்படுவோம் என நம்புகிறேன்.' என்றார்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments