பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!
அன்பார்ந்த வாசகர்களே!
உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.
10.12.24 முதல் 23.12.24 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 4.12.24
ஸ்ரீசிவகுருநாத சுவாமி கோயிலில்...
10.12.24 முதல் 23.12.24 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஸ்ரீஅழகாம்பிகை உடனருள் ஸ்ரீசிவகுருநாதசுவாமி கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இங்கு நிகழும் பிரதோஷ வழிபாடு பிரசித்திபெற்றது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்திற்காகவும்; திருமணம் மற்றும் புத்திர பிராப்திக்கும் அழகாம்பிகை சந்நிதியில் நேர்ச்சைகள் செய்வதும் விசேஷம். சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகளின் பரிபாலனத்தில் விளங்கும் இந்த ஆலயத்துக்குச் சென்றாலே சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆயுள், நீங்காத செல்வம், நிலைத்த ஆரோக்கியம் என அனைத்தும் அருளும் அற்புதமான இந்தத் தலத்தில், வாசகர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!
from Vikatan Latest news
0 Comments