மதுரையில் நடந்த மாவட்ட பாஜக தேர்தல் குழு பயிலரங்கத்தில் கலந்துகொண்ட பொன் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினின் ஆளுமையை, தமிழ்நாட்டு மக்கள் பார்க்க வேண்டியது கட்டாயம். வாரிசு அரசியல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
காங்கிரஸ் மற்றும் பிரியங்கா காந்தியின் தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவாரா? இவ்வளவு கேவலமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸும் திமுகவும் போய்விட்டது. இதேபோல் பல அரசியல் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், வாரிசு அரசியலை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
ஒரு தேர்தலையும் சந்திக்காத தவெக தலைவர் விஜய், எந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கூறுகிறார்? ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசும், அரசியல் கட்சிகளும் பல கோடிகள் செலவு செய்கின்றனர். இதனை குறைக்க வேண்டியது அரசியல் கட்சி மற்றும் மக்களின் கடமை. விஜய்யின் தீர்மானம் தவறானது.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளில் கலைஞர், பெரியார் பெயரை தவிர்த்து ஏதாவது ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினால் மட்டும் போதுமா? அவரின் கொள்கைகளை கடைப்பிடிப்போம் என்கிறார்களா?
ஆட்சி அமைத்தால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற தவெகவின் கருத்துக்கு மக்களிடையே எந்த வரவேற்பும் இருக்காது . அரசியல் கட்சிகள் மத்தியில் வேண்டுமானால் வரவேற்பை பெறலாம். பாஜக, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் பங்கு என்பதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அரசியலுக்கு தலைநகரம் மதுரைதான். சென்னை கிடையாது. வரக்கூடிய தேர்தலில், மதுரையை மையமாக வைத்து தமிழக தலைமைச் செயலகத்தின் துணைச் செயலகம் செயல்பட பாஜக குரல் கொடுக்கும். இதை விஜய்க்காக கூறவில்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from Vikatan Latest news
0 Comments