Ticker

6/recent/ticker-posts

Ad Code

"கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசு நிர்வாக திறனற்றது என்பது உறுதியாகியுள்ளது" - வானதி சீனிவாசன்

கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆய்வு கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர் அணி தலைவரும், பா.ஜ.க எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-விற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் பணியாற்றுவதற்கும் தேர்தல்கள் வாய்ப்பாக இருக்கிறன. அந்த வகையில், இந்த நாடாளுமன்ற தேர்தலை பா.ஜ.க நன்றாக எதிர்கொண்டது. பா.ஜ.க-வை பொறுத்தவரை இது நல்ல தேர்தல். நோட்டா கட்சி என்பது எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-விற்கு ஒன்றுமில்லை என்ற உருவாக்கத்தை கொடுப்பதற்கான ஏற்படுத்திய விளம்பர ரீதியான விஷயம். தற்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றுள்ளனர். அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை தாண்டி அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். நோட்டா என்பது கடந்த காலம். தற்போது தமிழகத்தில் பா.ஜ.க கட்சி மிகப்பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது.

சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். குடி என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமான விஷயம் என அமைச்சர்கள் கொண்டு செல்கிறார்கள். பூரண மதுவிலக்கை கொண்டு வரமுடியாது என அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதன் வாயிலாக, நாங்கள் வந்தால் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிற மக்களுக்கான வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜ.க நிகழ்ச்சி

மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என கூறிவந்த தி.மு.க. அரசு, இப்போது மதுக்கடைகளை வீதிக்கு வீதி திறந்து வைத்தும் கூட கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாத, நிர்வாக திறனற்ற அரசாக மாறியிருப்பதை, கள்ளச்சாராயம் சம்பவம் காட்டுகிறது. கள்ளச்சாராயம் சம்பவம் போன்ற பாதிப்புகள் வரும்போது, அதிகமாக பாதிக்கப்படுவது பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த அரசு சமூக நீதி பேசுகிற அரசு. ஆனால், இந்த அரசில் தான் அதிகமாக பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் மீது வன்கொடுமைகள் நடக்கிறது. தமிழகம் அதிகமாக ஆணவ கொலைகள் நடக்கிற மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. பள்ளிக்கூட சிறுவர்கள் சாதி ரீதியாக மோதிக்கொள்கிற சூழல். இந்த சமூகநீதி பேசுகிற தி.மு.க அரசில் தான் நடக்கிறது. ஆனால், இதுபற்றி பேசுவதற்கு தி.மு.க-விற்கு எந்தவித அருகதையும் இல்லை என்பதுதான் எதார்த்தம். 'கரூரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளது குறித்து கேட்கிறீர்கள். யாராக இருந்தாலும் அவர்கள் சட்டரீதியாக வழக்கை சந்திக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news

Post a Comment

0 Comments