Ticker

6/recent/ticker-posts

Ad Code

Tamil News Live Today: `தண்டனை கடுமையாக்கப்படும்’ - மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்!

`மதுவிலக்குச் சட்டம் - திருத்த மசோதா இன்று தாக்கல்!’ 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது, இந்நிலையில் , மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

நேற்றைய சட்டப்பேரவை விவாதத்தின் போது, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ``உயிருக்கு ஆபத்துவிளைவிக்கக் கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனைசெய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதல்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் -1937ல் திருத்த மசோதா ஒன்று சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும்.” என்றார். இன்று சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news

Post a Comment

0 Comments