திருப்பூர் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, யசோதா தம்பதி. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் தெய்வசிகாமணி இறந்துவிட்டார். கடந்த ஆண்டு யசோதா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இத்தம்பதியின் மகன்கள் கோகுல் (29) தினேஷ் (20). பெற்றோர் இறந்ததால், ஆதரவற்ற நிலையில் இருந்த கோகுல், தினேஷ் திருப்பூர் குமார் நகரில் உள்ள அவர்களது பாட்டி வள்ளியம்மாள் வீட்டில் வசித்து வந்தனர்.
பெற்றோர் இறந்த நிலையில் கோகுல், தினேஷ் ஆகிய இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாட்டி வள்ளியம்மாள் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றிருந்தபோது, கோகுல், தினேஷுக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது, தினேஷ் விட்டுக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டி வீட்டில் உள்ள பொருள்களுக்கு தீ வைத்துள்ளார். தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து வீட்டுக்குள் இருந்த தினேஷை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
from Latest news
0 Comments