மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரில் விஜயலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை இருக்கிறது. இக்கடையில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தவர் மகேஷ் நேபாளி. காலை நேரத்தில் இந்த நகைக்கடைக்கு அதன் உரிமையாளரான புருஷோத்தம் வந்திருக்கிறார். நகைக்கடையில் தங்க நகைகள் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பெட்டகம் மூன்றாக வெட்டப்பட்டு, அதில் இருந்த தங்க ஆபணங்கள் காணாமல் போயிருந்தன.
இது குறித்து புருஷோத்தம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்த போது நகைக்கடைக்குள் 4 பேர், நகை இருந்த பெட்டகத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்தனர். வாட்ச்மேன் மனைவியும், மேலும் இரண்டு பேரும் யாராவது வருகிறார்களா என்று கடைக்கு வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். நகைகளை கொள்ளையடித்த கும்பலை கைதுசெய்ய போலீஸார் தனிப்படை அமைத்திருக்கின்றனர். வாட்ச்மேன் தனது சொந்த ஊருக்கு தப்பிச்செல்லும் வாய்ப்பு இருப்பதால், அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
from Latest news
0 Comments