Ticker

6/recent/ticker-posts

Ad Code

Doctor Vikatan: கார்ன் ஃப்ளார் ஆரோக்கியமானதா... தினசரி சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: சோள மாவு என்பது வேறு.... கார்ன் ஃப்ளார் என்பது வேறா? இதை சமையலுக்குப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ரொட்டி செய்யப் பயன்படுத்தும் சோள மாவும் சரி, கார்ன் ஃப்ளாரும் சரி... சோளத்திலிருந்து எடுக்கப்படுவது தான். ஆனால் ஒவ்வொன்றும் எப்படிப் பதப்படுத்தப்பட்டு, சமைக்கப்பட்டு நம் தட்டுக்கு வருகிறது என்பதைப் பொறுத்து தான் அதன் ஊட்டச்சத்து பலன்கள் தீர்மானிக்கப்படும்.

கார்ன் சிரப் தயாரிக்கவும், சூப்பை கெட்டியாக்கவும், சாஸ் போன்றவற்றை சரியான பதத்துக்குக் கொண்டுவரவும் என பல விஷயங்களுக்காக கார்ன் ஃப்ளார் பயன்படுத்தப்படுவதுண்டு. குல்ஃபி தயாரிப்பில், இனிப்புகள் தயாரிப்பில், சமோசா போன்றவற்றை கரகரப்பாக்க, கிரேவி வகைகளை கெட்டியாக்க... இப்படி கார்ன் ஃப்ளாரின் உபயோகம் அதிகம்.

கார்ன் ஃப்ளார் என்பது 90 சதவிகிதம் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே கொண்டது. சோளத்திலிருந்து எடுத்தாலும் அது சுத்திகரிக்கப்பட்டு, எல்லா சத்துகளும் நீக்கப்பட்ட வெறும் மாவுச்சத்துதான் அது. புரதச்சத்து, நார்ச்சத்து என அதில் எதுவுமே கிடையாது. நீரிழிவு உள்ளவர்கள் இப்படி வெறும் கார்போஹைட்ரேட் மட்டும் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

அதுவே வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் மக்காச்சோள மாவில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அதாவது 100 கிராம் சோள மாவில் 10 கிராம் புரதம் இருக்கும். 10 கிராம் நார்ச்சத்து இருக்கும். 4 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமான பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துகள் உள்ளன.

சோளம்

பதப்படுத்தாமல், சிறுதானியமான சோளத்திலிருந்து அப்படியே எடுக்கப்படும் இந்த மாவில் தோசை, ரொட்டி போன்றவை செய்யலாம். எனவே மக்காச்சோள மாவை கோதுமை மாவுடன் கலந்து தோசை, ரொட்டி செய்யலாம். இந்த மாவையும், வெள்ளை வெளேரென கிடைக்கும் கார்ன் ஃப்ளாரையும ஒன்று என குழப்பிக்கொள்ள வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news

Post a Comment

0 Comments