விகடன் சினிமா விருதுகள் 2020-21, 2022 நிகழ்வு சென்னை டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்களும் பங்கேற்ற இந்த விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 'வாடிவாசல்' படம் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்டுகள் பலவும் வெளியிடப்பட்டன. அவை இங்கே...
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோர் `இந்தியன் -2’ திரைப்படத்தின் அப்டேட்டுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டனர்.
முதலில் நடிகர் கமல்ஹாசன், "பல தொழில்நுட்பங்கள் இணையாவிருக்கின்றன. விரைவில் வெளிவரும். நீங்களும் அவற்றைக் காண வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கூறி ரசிகர்களின் அன்பைத் தன் வசமாக்கினார்.
அதன் பிறகு வந்து பேசிய இயக்குநர் ஷங்கர், ``ஜூன் மாதத்துடன் வசனக் காட்சிகளெல்லாம் முடிந்துவிடும். அதன் பிறகு பாடல் மற்றும் VFX பணிகள் முடிந்து படம் வெளியாகும். அனிருத்திடம் ஒரு குட்டிப் பாடல் கேட்டிருக்கிறேன். அது ரெடியானவுடன், `இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ வெளியாகும்’’ எனக் கூறி விடைபெற்றார்.
from Latest news
0 Comments