Ticker

6/recent/ticker-posts

Ad Code

500-க்கும் மேற்பட்ட பொருள்களின் பட்டியல்... இந்தியாவிடம் கோரிக்கை வைத்த ரஷ்யா?!

ரஷ்யா- உக்ரைன் போர் சூழலால் உலக நாடுகள் பல ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. பொருளாதாரத் தடைகள் எந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டதோ, அந்த நாட்டுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இயலாது. இதனால் ரஷ்யா பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கார்கள், விமானங்கள் மற்றும் ரயில்களுக்கான சில உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருள்களின் பட்டியலை இந்தியாவுக்கு ரஷ்யா அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யக் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு ரஷ்யாவின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை உடனடியாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா ஆர்வமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியா - ரஷ்யா

ரஷ்யாவிலிருந்து இந்திய இறக்குமதி பிப்ரவரி 24 முதல் நவம்பர் 20 வரை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்து 29 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இதற்கிடையில், இந்தியாவின் ஏற்றுமதி 2.4 பில்லியன் டாலர்களிலிருந்து 1.9 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. எனவே, ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்று, வரும் மாதங்களில் இந்தியா தனது ஏற்றுமதியை கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்களாக உயர்த்தமுடியும் என நம்புவதாக சொல்லப்படுகிறது.



from Latest News

Post a Comment

0 Comments