Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஹேக் செய்யப்பட்ட பாலிவுட் நடிகரின் இமெயில்; நிகழ்ச்சியை ரத்துசெய்து ரூ.13 லட்சத்தை அபகரித்தவர் கைது!

இணையதள குற்றங்களிலிருந்து பிரபலங்கள்கூட தப்பிப்பதில்லை. சோசியல் மீடியாவில் நட்பு கோரிக்கை விடுத்து அதில் சிக்குபவர்களிடம் மோசடி செய்பவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் இமெயில், வங்கிக் கணக்கு, மொபைல் போன்களை ஹேக் செய்து பணத்தை மோசடி செய்கின்றனர். பாலிவுட் நடிகர் புனித் இஸ்ஸார் மும்பையிலுள்ள என்.சி.பி.ஏ அரங்கில் நிகழ்ச்சி நடத்துவதற்காக முன்பதிவுசெய்து ரூ.13.76 லட்சத்தை கொடுத்திருந்தார். நிகழ்ச்சி ஜனவரி மாதம் 14, 15-ம் தேதிகளில் நடப்பதாக இருந்தது. ஆனால் சமீபத்தில் என்.சி.பி.ஏ அரங்கை தொடர்பு கொண்டபோது, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த புனித் தனது இமெயிலை திறக்க முயன்றார்.

நடிகர் புனித்

ஆனால் பல முறை முயன்றும் இமெயிலை திறக்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த புனித், இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே அரங்க நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அரங்கத்தினர் நிகழ்ச்சியை ரத்து செய்து பணத்தை புனித் இமெயில் வாயிலாக திரும்பப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். உடனே பணம் யாருக்கு சென்றிருக்கிறது என்ற விவரத்தை போலீஸார் விசாரித்தனர். அதன்படி அந்த வங்கிக் கணக்கை கண்டுபிடித்தனர். அந்த வங்கிக் கணக்கில் எந்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை கண்டுபிடித்து, அதனடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர். மும்பை மத் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் சுஷில் குமார் என்ற அந்த நபர் உடனே கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது நடிகரின் இமெயிலை ஹேக் செய்து நிகழ்ச்சியை ரத்து செய்வதற்காக வேண்டுகோள் விடுத்து அதன் மூலம் கிடைத்த பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.



from Latest News

Post a Comment

0 Comments