Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திடீரென நேற்று நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்குப் பிறகு இருவருமே தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தீபிகா படுகோனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு விதமான லேசாக மயக்க நிலை ஏற்பட்டது. உடனே அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு வகையான சோதனைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் என்ன பிரச்னை என்றோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்தோ தீபிகா படுகோன் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தீபிகா படுகோன்

இது குறித்து தயாரிப்பாளர் அஸ்வினி தத் வெளியிட்ட செய்தியில், ``தீபிகா படுகோன் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், வழக்கமான சோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றார் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதமும் தீபிகா படுகோன் பிராஜெக்ட் கே படத்தின் படப்பில் பங்கேற்றபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது இதய துடிப்பு கடுமையாக அதிகரித்தது. உடனே அவர் ஐதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது." என்றார். தற்போது தீபிகா படுகோன் நடிகர் ஷாருக்கானின் பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து முதல் முறையாக நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து பைட்டர் என்ற படத்தில் தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.



from Latest News

Post a Comment

0 Comments