Ticker

6/recent/ticker-posts

Ad Code

கோவை ஆவின் அலுவலகத்தில் திடீர் ரெய்டு - அதிரடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்

கோவை பச்சாபாளையம் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அலுவலகம் உள்ளது. அங்கு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்வது, சம்பள நிலுவைத் தொகை போன்ற பல்வேறு விவகாரங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.

கிருஷ்ணமூர்த்தி

முக்கியமாக ஆவின் தொழிலக மூத்த உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி மீது ஏராளமான புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று அங்கு திடீரென்று சோதனை நடத்தினர். பொதுமேலாளர் அறை, கிருஷ்ணமூர்த்தியின் அறை, கார் என்று பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

கோவை ஆவின் அலுவலகம்

நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனையில் ரூ.8,40,000 பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5,90,000 கிருஷ்ணமூர்த்தியின் காரில் இருந்தும், ரூ.2,50,000 அவரின் கபோர்டில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஊழியர்களின் நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி, அங்கு வானளாவிய அதிகாரத்துடன் வலம் வந்ததாக ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். ஊழியர்களிடம் வெற்று காசோலை வாங்குவது,

பணம்

தனக்கு கட்டுப்படாவிடின் அவர்களை மாற்றம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆவின் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.



from Latest News

Post a Comment

0 Comments