Ticker

6/recent/ticker-posts

Ad Code

புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றத் திட்டம்.. மாநிலங்களவையில் இன்று மசோதா தாக்கல்...!

தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று புதிய சட்ட மசோதாவை மத்திய சட்டத் துறை அமைசர் கிரண் ரிஜிஜூ நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஆதார் எண் இனைப்பதன் மூலம் தடுக்கப்படும் என்றார். ஆதார் எண்ணைத் தர இயலாதவர்கள் வாக்காளார்களாக சேர்த்துக்கொள்ள மறுப்பில்லை என்றும், அதற்கு பதில் வேறு எதாவது அடையான சான்றை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்றார். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களின் பெயரை நீக்க மசோதா அனுமதிக்காது என்று குறிப்பிட்டார். புதிய சட்ட மசோதாவின் படி ஆண்டுக்கு நான்கு முறை புதிய வாக்காளர்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 14-வது பிரிவில் திருத்தம் செய்யப்படும் என்றார். ஆதார் எண்ணை வாக்களர் பட்டியலில் இணைப்பதன் மூலம் குடிமக்கள் அல்லாதவர்களும் வாக்களிக்கும் உரிமையை மசோதா வழங்குவதாக எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments