Ticker

6/recent/ticker-posts

Ad Code

புத்தாண்டு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள்

புத்தாண்டையொட்டி சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருட்டு வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள், செல்போன்கள், வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாடத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

image

மெரினா உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments