Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஜெயலலிதா வசித்த இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபா, தீபக் மனு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 3 வாரத்திற்குள் வேதா நிலையத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம் மனு அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் நகலும் மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

''பொருத்தருள்க.. இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்'' - அமைச்சர் கே.என். நேரு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments