Ticker

6/recent/ticker-posts

Ad Code

அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி நடிகர், நடிகைகளிடம் ரூ.200கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவி கைது

தெலுங்கானாவில் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி சினிமா நடிகர்கள், நடிகைகள், பைனான்சியர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படும் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். ஐதராபாத்தில் உள்ள நர்சிங்கி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஷில்பா, அவரது கணவர் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பெரும்பாலானோர் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது தங்களிடம் பணமே கிடையாது என்று கூறிவிட்டார்கள். எனவே அவர்கள் வசூல் செய்த பணத்தை என்ன செய்தார்கள், எங்கு முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments