ரஷ்யாவில் கொரோனாவால் ஏற்படும் அடுத்தடுத்த உயிரிழப்புகளால் ஒரே வாகனத்தில் இரண்டு, மூன்று சடலங்களை ஏற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை நடந்திராத வகையில் கடந்த ஒருநாளில் மட்டும் 1,159 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய போதிய இடம் இல்லாததால் Nizhny Novgorod, Tomsk உள்ளிட்ட நகரங்களில் இடுகாடு பிரச்சினை ஏற்பட்டு புதிதாக இடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments