சத்துணவு அமைப்பில் வேலை வாங்கி தருவதாக 75 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராசிபுரத்தைச் சேர்ந்த குணசீலன் என்பவர் தனது உறவினரான சரோஜாவிடம் கடந்த பல வருடங்களாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், குணசீலன்15 பேரிடம் 75 லட்சம் ரூபாய் பெற்று சரோஜாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது பணத்தைக் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக ராசிபுரம் காவல்நிலையத்தில் குணசீலன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் சரோஜா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments