முகநூல் மூலம் பெண்ணிடம் காதல் வலை வீசி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்ததாக போலி சீரியல் நடிகரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டியை சேர்ந்த பெண் அளித்த புகாரில், திருவொற்றியூரை சேர்ந்த சந்தோஷ் ராஜா என்பவர் சீரியல் நடிகர் என முகநூலில் பழக்கமாகி, வாட்ஸ் அப் எண்ணில் ஒரு மாதமாக காதலித்து வந்ததாகவும், பணத் தேவை எனக்கூறி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டு தலைமறைவானதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சந்தோஷ் ராஜா மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments