மலேசியாவில் தாறுமாறான வேகத்தில் சென்ற டிரக் இடதுபுறமும், வலது புறமும் சக்கரங்களைத் தூக்கியவாறு அதிபயங்கர விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. மேற்கு லாங் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து சென்ற ட்ரக், அதிக வேகம் காரணமாக அதன் சக்கரங்கள் கட்டுப்படுத்த முடியாமல் இடப்புறமும், வலப்புறமும் தூக்கியாவறு சாலையில் சரிந்துவிழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி போதையில் இருந்த ஓட்டுநரைக் கைது செய்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments