Ticker

6/recent/ticker-posts

Ad Code

கடன் கொடுத்தவர் கடுமையாக பேசியதால் ஆத்திரம்... பணத்தை திருப்பி அளித்துவிட்டு செருப்பால் அடித்த பெண்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கடன் கொடுத்தவர் கடுமையாக பேசியதால், பணத்தை திருப்பி கொடுத்து விட்டு செருப்பால் தாக்கிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மொங்காம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரிடம் வெள்ளைத்தாய் என்ற பெண் ஒன்றரை லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்த பணத்தை வெள்ளைத்தாய் உரிய நேரத்தில் தராமல் இழுத்தடித்து வந்ததால் சந்திரசேகர் அவரை கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைதாய் நேற்று  சந்திரசேகரனின் வீட்டுக்குச் சென்று தான் வாங்கிய கடன் ஒன்றரை லட்சத்தை திரும்ப கொடுத்துள்ளார். மேலும் தம்மை திட்டியதற்காக அவரை செருப்பால் சரமாரியாக தாக்கி உள்ளார். சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எரியோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments