Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாய் பரிசு..! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு சலுகைகளை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தங்கப் பதக்கம் வெல்வோருக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தடகள போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கும் பரிசுத்தொகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ரயில்வே சார்பில் 25 விளையாட்டு வீரர்கள் 5 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments