Ticker

6/recent/ticker-posts

Ad Code

பிரதமர் மோடியின் கால் தொட்டு வணங்கவும் தயார்... தலைமைச் செயலாளரை மாற்றும் உத்தரவை ரத்து செய்ய மம்தா வலியுறுத்தல்

மேற்கு வங்க மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கக் கூடத் தயார்....தலைமைச் செயலரை மாற்றும் உத்தரவை ரத்து செய்யுங்கள் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமரை மம்தா பானர்ஜி அவமதிப்பு செய்ததாக பாஜகவினர் சாடி வரும் நிலையில் மத்திய அரசு மேற்குவங்கத் தலைமைச் செயலாளர் ஆலப்பன் பந்தோபத்யாயாவை மாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி புயல் சேதத்தைப் பற்றி ஆய்வு செய்து ஆலோசனை நடத்திய போது அக்கூட்டத்தில் வராமல் 30 நிமிடங்கள் பிரதமரை காக்க வைத்த மம்தா பானர்ஜி, பிரதமரிடம் புயல் சேத அறிக்கையைக் கொடுத்து விட்டு தலைமைச் செயலரை அழைத்துச் சென்றுவிட்டார். இதனையடுத்து தலைமைச் செயலரை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டது.மாநில அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு இடையூறு செய்வதாக கூறிய மம்தா பானர்ஜி, தங்களைப் பணி செய்ய விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments