மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். லாலு பிரசாத்தின் உடல் நிலை பாதிப்பையடுத்து , தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்ய ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 12 நாட்கள் கழித்து விடுதலை உத்தரவைப் பெற்ற அவர் வழக்கறிஞர்கள் அதனை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ராஞ்சியில் உள்ள சிறையில் இருந்து லாலு பிரசாத் விடுதலை செய்யப்பட்டார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments