ரயில்களில் இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரயில் பாதுகாப்பு ஆணையர் பரிந்துரைத்தார். ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல் படி மேற்கு ரயில்வே நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments