Ticker

6/recent/ticker-posts

Ad Code

தருவியா தரமாட்டியா... தரலேனா உனக்கு என் ஓட்டு இல்லை போ..! ஸ்ரீப்ரியாவை தொடரும் சோகம்

மயிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கச்சென்ற நடிகை ஸ்ரீப்ரியாவிடம் கைகொடுக்கச்சொல்லி அடம்பிடித்த மது மயக்க தொண்டர் ஒருவர் செய்த வாக்குவாத சேட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டது சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீப்ரியாவுக்கும் , மதுப்பிரியர்களுக்கும் இடையே ஏற்படும் வாக்குவாத சேட்டைகள் தொடர்கின்றன. ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஆதரவாளர்கள் எட்டுபேருடன் திறந்த ஆட்டோவில் நின்ற வாறு நடிகை ஸ்ரீப்ரியா வாக்கு சேகரித்துக் கொண்டு சென்றார். வழியில் அவர்களை மறித்த குடிமகன் ஒருவர் ஸ்ரீப்ரியாவிடம் கை குலுக்க கையை நீட்டினார், கொரோனா... கொரோனா... அதனால் இப்ப வேணாம் என்று கூறி சாமர்த்தியமாக ஸ்ரீப்ரியா தவிர்த்தார் கைய கூட கொடுக்க மாட்டேன்றீங்க அப்புறம் எப்படி நான் உங்களுக்கு ஓட்டு போடுவது என உரிமைக்குரல் எழுப்பினார் அந்த குடிகார்..! என்னால் உங்களுக்கு கொரோனா வந்து விடும் என்று ஸ்ரீப்ரியா கூற உங்களுக்கு கொரோனா இருக்கா என்று தயக்கத்துடன் கேட்ட குடிகாரரரிடம், ஸ்ரீப்ரியா ஆமாம் என்று கூறி கைகொடுக்காமல் தவிர்த்தார். அத்தோடு விடாமால் குறு குறுவேன பார்த்தபடி நின்ற அந்த குடிகாரரை நோக்கி உங்க நல்லதுக்குதான் சொல்கிறேன், இப்போது கை கொடுத்தால் நம்ம இரண்டு பேரையும் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள் என்று பயமுறுத்த, அந்த குடிமகரோ சாரி மேடம் சாரி என்று கேட்டபடியே கையெடுத்து கும்பிட்டபடி ஓட்டம் எடுத்தார் மற்றொரு தெருவில் 4 வயது சிறுவனிடம் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு கேட்ட போது அவன் நீட் தேர்வை ரத்து செய்யுங்க நான் டாக்டராகனும்னு மழலை மொழியில் கோரிக்கை வைத்து அதிசயிக்கவைத்தான் இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீப்ரியா, நீட் தேர்வு வேண்டாம், சீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று கூறியவாறு வாக்கு சேகரித்தார்

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments