மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாம்னா பத்திரிகையின் ஆசிரியரும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவியுமான ரஷ்மி தாக்கரே சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதியானதால் சர் ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரும் கடந்த 11ம் தேதிதான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments