தனது குடும்பமே வில்லன்குடும்பம் என்று பிரச்சாரத்தில் பேசிய நடிகர் ராதாரவி, வாக்காளர்களைக் கவர்வதற்காக ஆபாச ஜோக் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். நடிகை குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி, எதிர்கட்சியினரை சரமாரியாக வாய்க்கு வந்தபடி வசைபாடி கிண்டல் கேலி செய்தார். தனது குடும்பமே வில்லன்குடும்பம் என்றும் தனது அப்பாவுக்கு 20 மனைவிகள் என்று அவர் யாரையும் தெருவில் விடவில்லை என்றும் கூறி கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தார் ராதாரவி. மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை கிறிஸ்தவர் என்று விமர்சித்த ராதாரவி, கமலும் தானும் அரைக்கால் டவுசர் அணிந்த காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பதால் அவ்வாறு விமர்சிப்பதாக கூறினார். ஒரு கட்டத்தில் சுடுகாட்டில் புதைத்த பெண் சடலத்துக்கு கூட திமுகவினர் தொல்லை கொடுத்ததாக ஜோக் என்ற பெயரில் ஆபாசமாக பேசி கூட்டத்தினரை எழுந்து செல்ல வைத்தார். எழுந்து சென்ற தொண்டரையும் ஆபாசமாக பேசி அமர வைத்தார் ராதாரவி அதே போல மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன், சிப்பிக்குள் முத்தாக பிரச்சாரம் மேற்கொண்ட ராதிகாவின் பேச்சும் எல்லை மீறியது..! அதிமுக தேர்தல் அறிக்கையில் பொண்ணு மாப்பிள்ளை மட்டுமே தேடிக் கொடுக்கவில்லை என்று விமர்சித்த ராதிகா, கொஞ்சம் விட்டால் பொண்ணு, மாப்பிள்ளை. சாந்திமுகூர்த்தத்தை கூட இலவசமாக கொடுப்பார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments