Ticker

6/recent/ticker-posts

Ad Code

சென்னையில் இன்று காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இன்று காலை முதல் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 9 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்லவன் இல்லம் மற்றும் பல்வேறு பணிமனைகளில் இருந்து உள்ளூர் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகளும் பெருமளவு இயக்கப்பட்டு வருகின்றன. சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் குறைந்த அளவு அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments