Ticker

6/recent/ticker-posts

Ad Code

கே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..! இதோ வந்துட்டான்ல செல்லம்..!

கழுத்து மற்றும் கைகளில் 4 கிலோ நகைகளுடன் சுற்றித்திரியும் ஆலங்குளம் சட்டமன்ற வேட்பாளர் ஹரி தமிழ் திரையுலகில் குதித்துள்ளார். கே.ஜி.எப் கெட்டப்பில் கோடம்பாக்கத்திற்குள் புல்லட்டு பாண்டியாக புகுந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு  எத செய்தாலும் நாலு பேர் நம்மை பார்க்க வேண்டும் என்ற கொள்கையுடன் கழுத்து மற்றும் கைகளில் தங்க சங்கிலிகளுடன் வலம் வருபவர் பனங்காட்டுபடை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளர் நடமாடும் நகைக்கடை ஹரி..! லாக்டவுனுக்கு பின்னர் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் திரை உலகை தங்கத்தால் தூக்கி நிறுத்த கே.ஜி.எப் கெட்டப்பில் புல்லட்டு பாண்டியாக புகுந்துள்ளார் ஹரி கழுத்து மற்றும் கைகளில் ஏற்கனவே மூன்றரை கிலோ நகைகளுடன் வலம் வந்த ஹரி, சினிமாவில் தனது பிரமாண்டத்தை காட்டுவதற்காக எக்ஸ்ட்ராவாக அரைகிலோ தங்க சங்கிலியை வாங்கி கழுத்தில் மாட்டிக் கொண்டு மொத்தம் நான்கு கிலோ தங்கம் அணிந்த நகைகடையாக வலம் வருகின்றார் 2கே அழகானது காதல் என்ற பெயரில் ஹரி தயாரித்து நாயகனாக நடிக்கும் இந்த திரைகாவியத்திற்கு விளக்கேற்றி வைத்ததோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹரியுடன் கைகோர்க்கிறார் குடும்ப குத்து விளக்கு வனிதா ..! யார் இந்த ஹரி ? என்று பார்க்க வந்ததாக தெரிவித்த தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி பார்த்த பின்னர் தான் உடலில் கிடக்கின்ற தங்கத்தை வைத்தே இன்னும் ரெண்டு படம் தயாரிக்கலாம் என்பது தெரியவந்ததாக கலாய்த்தார் சாதி பிரச்சனை வராமல் காதல் பண்றது எப்படி? என்பதற்காக இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்த நிலையில் கள்ளகாதல் தவறில்லை என்பதை உணர்த்த படம் எடுக்கிறீர்களா ? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார், உடனடியாக முந்திக் கொண்ட வனிதா, உங்களை எல்லாம் எங்கிருந்து புடிச்சிட்டு வந்தாங்க ? என்று சிரித்தபடியே சமாளித்தார். அதற்குள்ளாக அழகானது காதல் என்று தான் படம் எடுக்கிறோம் கள்ளகாதல் படம் பண்ணவில்லை என்று பதில் அளித்தார் இயக்குனர்..! வேட்டிச் சட்டையோடு போனாலே திரை உலக சிற்பிகள் எல்லாவற்றையும் உருவிக் கொண்டு தான் விடுவார்கள், இங்கே ஒரு நகைகடையே போய் எடுத்துகோன்னு நிற்கிறது...! ஹரியின் கே.ஜி.எப் வருகிறதோ இல்லையோ, அண்ணாச்சி நகைகள் அடகுகடைக்கு போகாமல் இருந்தால் சரிதான்..!

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments