கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில நிர்வாக இயக்குநர்களுடன் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில், கோவிட் தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கையை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதற்காக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் பாராட்டினார். தடுப்பு மருந்து அதிகம் பேருக்கு சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments