தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிற நாடுகளில் விடுமுறை விடப்படுவதையொட்டி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இன்று ரேஷன் கடைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments