அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத் தலைநகர் ஆஸ்டினிலுள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி மருத்துவர் பாரத் நாருமாஞ்சி சக பெண் மருத்துவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரத் நாருமாஞ்சி இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று மருத்துவமனைக்கு வந்த அவர் இந்த விபரீத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments