வரலாற்று மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பலவற்றில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் தனது 71-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், மக்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் பல்வேறு சவால்களை சந்தித்த உச்ச நீதிமன்றம் நேரடி அமர்வுகளைத் தவிர்த்து காணொலி வாயிலாக முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளின் விசாரணையை மேற்கொண்டது. கடந்த ஆண்டில் 231 அமர்வுகளில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments