Ticker

6/recent/ticker-posts

Ad Code

அந்த நடிகையின் 6 வது திருமணம்..! வனிதாவுக்கே டஃப் கொடுத்த சம்பவம்

75 வயது பேட்மேன் பட தயாரிப்பாளரை, 5 வதாக திருமணம் செய்த பன்னிரண்டே நாட்களில் விவாகரத்து செய்துள்ள, 53 வயது நடிகை பமீலா ஆண்டர் சன், 6 வதாக தன்னுடைய பாடிகார்டை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.  நம்ம ஊரு வனிதாவுக்கு சவால் விடும் பமீலாவின் காதல் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு காலையில் திருமணம் ... மாலையில் விவாகரத்து என்பது சினிமாக்கதைகளில் சகஜமான ஒன்று ஆனால் நிஜத்தில் பிடித்தால் திருமணம், சலித்து போனால் டைவர்ஸ் என பிரபல நடிகை பமீலா அண்டர் சன் செய்து வரும் காதல் திருமண அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல..! தற்போது 6 வது திருமணம் செய்துள்ளதாக இன்ஸ்டாவில் இம்சை கொடுத்து வரும் பமீலா ஆண்டர்சனுக்கு 53 வயது ஆகின்றது..! பேவாட்ச் என்ற தொலைக்காட்சி தொடரில் அரையும் குறையுமாக தோன்றி பிரபலமான நேரத்தில்... 1995 அம் ஆண்டு அதாவது 25 வருடங்களுக்கு முன்பு டோமி லீ என்ற இசைக்கலைஞரை காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். 1998 ஆம் ஆண்டு டோமி லீயுடன் ஏற்பட்ட விரிசலால் அவரை விவாகரத்து செய்து விட்டு சில வருடங்கள் சிங்கிளாக வலம் வந்த பமீலா 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு , ரிக் சாலமோன் என்ற விளையாட்டு வீரரை கரம் பிடித்தார். 2008 ஆம் ஆண்டு அவரை பிரிந்த பமீலா மீண்டும் சிங்கிளானார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் ரிக் சாலமோனையே திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திற்குள் அவருடனான இல்லற வாழக்கை கசந்ததால் மீண்டும் அவரை விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பேட் மேன் படத்தயாரிப்பாளரான 75 வயது ஜான் பீட்டர்ஸ் என்பவரை 5 வதாக திருமணம் செய்து கொண்டார். 12 நாட்களில் அவரை விரட்டிய பமீலா அடுத்த இன்னிங்ஸ்க்காக காத்திருந்தார். இந்த நிலையில் அவருடன் பாடிகார்டாக சுற்றி வந்த டான் ஹேஹர்ஸ்டை தற்போது 6 வது கணவராக திருமணம் செய்து கொண்டதோடு, தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகின்றார். 4 திருமணம் செய்து கணவர்களை விகாரத்து செய்து சிங்கிளாக வலம் வரும் நம்ம ஊரு நடிகை வனிதாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பவர் காட்டுகிறார் பமீலா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். காதலும் ,கல்யாணமும் பமீலாவின் இஷ்டத்தில் நிச்சயிக்கப்படுவதால், மேலை நாட்டு கலாச்சாரப்படி தேவையில்லை என்றால் உடனடியாக கார் டயர் போல கணவன் மார்களை கழட்டி வீசி வருவது குறிப்பிடதக்கது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments